இலங்கை வரலாற்றில் நாணயசுழச்சிமூலம் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு ?

இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நாணயசுழச்சிமூலம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவுசெய்யப்படவுள்ளார்.

பொதுத்தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜெயசேகரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரால் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கமுடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படும் வெற்றிடத்துக்கு இரத்தினபுரி மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்ததாக உள்ள வேட்பாளர் தெரிவுசெய்யப்படுவார்.

என்றாலும் அதில் ஒரு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. விருப்பு வாக்கில் அடுத்த இடத்தில் உள்ள இருவர் சமஅளவான வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டிருந்த ரஞ்சித் பண்டாரா மற்றும் சன்னி ரோஹனா கொடித்துவக்கு, ஆகிய இருவரும் 53,261 வாக்குகள் என்ற அடிப்படைடியில் பெற்றுள்ளனர்.

இதனால் இந்த வெற்றிடத்துக்கு நாணயசுழற்சி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *