3 வயது சிறுமியைத் தூக்கிக் கொண்டு பறந்த காத்தாடி.. ஷாக்கான மக்கள்.. தைவான் திருவிழாவில் பரபரப்பு!

தைபே: தைவான் நாட்டில் காற்றாடி பறக்கவிட்ட சிறுமி காற்றில் தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டின் நன்லியோ கடற்பகுதியில் காற்றாடி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் தங்களது குடும்பத்துடன் கலந்துகொண்டு விதவிதமான காற்றாடிகளை பறக்கவிட்டு மகிழ்ந்தனர். குறிப்பாக ஏராளமான சிறுவர்கள் இந்தத் திருவிழாவில் கலந்துகொண்டனர்.தனது குடும்பத்துடன் திருவிழாவில் பங்கேற்ற 3 வயது சிறுமி ஒருவர், ஒரு பெரிய அளவு காற்றாடியை காற்றில் பறக்கவிட்டு, அதன் கயிற்றை கையில் பிடித்திருந்தாள். அப்போது திடீரென காற்று பலமாக வீசியது. இதனால், காற்றாடி மிக வேகமாக பறக்கத் துவங்கியது. சிறுமியால் காற்றாடியை பிடித்து நிறுத்த முடியவில்லை.

காற்றாடி உயரப் பறந்த போது அதனுடன் சேர்ந்து அந்தச் சிறுமியும் மேலே தூக்கிச் செல்லப்பட்டாள். இதைப்பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்து, சிறுமியை கீழே இழுக்க முயன்றனர். ஆனால் காற்று பலமாக வீசியதால் காற்றாடி நூலை பிடித்தப்படி சிறுமி அந்தரத்தில் தொங்கினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *