வாழ்க்கைச் செலவை கண்காணிக்க உப குழு நியமனம்!

சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் விநியோக ஏற்ற இறக்கங்கள், காலநிலை தாக்கம் பருவகால உற்பத்திகள் தயாரிப்புகளில் இடம்பெறும் மாற்றம், சர்வதேச சந்தையில் விலைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வாழ்க்கைச் செலவை நிலையானதாக முன்னெடுப்பதற்கு தேவையான கொள்கை மற்றும் நடைமுறைத்தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதியின் தலைமையிலும் பிரதமர், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன,  விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே ,  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண ஆகியோரது அங்கத்துவத்துடனான வாழ்க்கைச் செலவு தொடர்புடனான அமைச்சரவை உப குழுவை நியமிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த துணைக்குழுவின் பணிகளுக்காக கீழ் குறிப்பிடப்பட்ட இராஜாங்க அமைச்சர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
*நெல் மற்றும் தானியம் சேதனப் பசளை உற்பத்தி உணவுப்பொருட்கள், மரக்கறி, பழங்கள், மிளகாய், வெங்காயம் மற்றும் கிழங்கு உற்பத்தி மேம்பாடு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்‌ஷ
*கூட்டுறவு சேவை, விற்பனை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன
*தெங்கு, கித்துள், பனை மற்றும் இறப்பர் உற்பத்தி அபிவிருத்தி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விவசாய பொருட்கள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி விரிவாக்க இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *