பூமியை நோக்கி வரும் பேராபத்து !

கொரோனாவைரஸ் பாதிப்பு தீவிரம், உலகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் வெள்ளம், நிலநடுக்கம் என 2020 ஆண்டு ராசி இல்லாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் உலகில் புதிதாக மற்றொரு பேராபத்து ஏற்பட இருப்பதாக கூறும் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

சமூக வலைதளங்களில் வலம் வரும் பதிவுகளில் 2020 ஆண்டு இறுதியில் உலகம் மற்றொரு பேராபத்தை எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆபத்து அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் தினத்திற்கு முந்தைய நாள் ஏற்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் பூமியை நோக்கி சிறுகோள் ஒன்று வந்து கொண்டிருப்பதாகவும், இது பூமியை நெருங்கினால் பேரழிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2020 பெரிய பாதிப்புடன் நிறைவுபெறும் என வைரல் பதிவுகளில் கூறப்படுகிறது.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில் நவம்பர் 2 ஆம் தேதி சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வர இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், இது பூமியில் இருந்து 2,60,000 மைல் தூரத்திலேயே இருக்கும். இதனால் பூமிக்கு ஆபத்து ஏற்பட 0.41 சதவீத வாய்ப்பே உள்ளது.

இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள தகவல்களில் பூமியை நோக்கி வரவிருக்கும் சிறுகோள் அளவில் 6.5 அடி நீளமாக இருக்கும். ஒருவேளை அது பூமிக்குள் நுழைய முற்பட்டால் சிறுகோளின் அளவு காரணமாக அது எரிந்துவிடும் என தெரிவித்து இருக்கிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு இறுதியில் பூமிக்கு பேராபத்து ஏற்பட போவதாக கூறும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *