ஆயிரம் வருடங்களுக்கு முன் இஸ்லாமியர்கள் ஆட்சியின் நாணயங்கள் கண்டுபிடிப்பு!

மத்திய இஸ்ரேலில் நடந்து வரும் அகழாய்வு ஒன்றில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட 425 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமிய அரசின் தொடக்கக் காலத்தில் அந்த பகுதி அப்பாஸில் காலிஃபட்டின் ஆட்சியின் கீழ் இருந்த போது பயன்படுத்தப்பட்ட நாணயங்களாக அவை இருக்கலாம் என கருதப்படுகிறது.
845 கிராம் எடை உள்ள அந்த நாணயங்கள் புதைக்கப்பட்ட காலத்தில் பெரும் மதிப்பு உடையதாக இருக்கலாம்.

அந்த நாணயங்களை கொண்டு காலிஃபட்டின் அட்சியின் கீழ் உள்ள ஒரு நகரத்தில் சொகுசு வீடு ஒன்றை வாங்கி இருக்க முடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.
அந்த நாணயங்களுக்கு சொந்தக்காரர்கள் யார்? ஏன் அவர்கள் அதனை புதைத்து வைத்தனர் அல்லது ஏன் அதனை மீண்டும் எடுக்க வரவில்லை என்பது ஒரு புதிராகவே உள்ளது.

1100 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாணயங்களை புதைத்து வைத்த நபர், மீண்டும் எடுக்கும் நோக்கத்துடனே புதைத்து வைத்திருக்கிறார்.

நாணயங்கள் உள்ள அந்த பாத்திரத்தை ஆணி அடித்து மூடி வைத்திருக்கிறார் என்கிறார் அகழாய்வின் இயக்குநர் லியாட் நடாவ் ஜிவ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *