தூக்கமே சிறந்த மருந்து!

நம்முடைய வாழ்வில் உறக்கம் மற்றும் உடல், மன இயக்க கடிகாரம்(Circadian rhythm) ஆகிய இரண்டு காரணிகள் பெறுகிற இடத்தைப் பற்றி யாராவது, என்றைக்காவது வியப்பு மேலிடஎண்ணிப் பார்த்து உள்ளோமா?! ஏனென்றால் இவை இரண்டும் மெலட்டோனின் என்ற ஹார்மோனை பின்னணியாக கொண்டு சுழன்று வருகின்றன.

மாசுக்களை வெளியேற்ற உதவும் வேதிப்பொருட்களின் கலவையான AntiOxidant பற்றி தற்போது அதிகம் பேசுகிறோம். இந்த ஆன்டி ஆக்சிடண்ட் என்பது உணவுகளில் இருந்து பெறப்படுபவை என்பதையும் அறிந்திருப்போம். இதில் சுவாரஸ்யமான உண்மை என்னவெனில் தூக்கமும் முக்கியமான ஆன்டி ஆக்சிடண்ட் என்பதுதான். நாம் மிகவும் குறைவாக மதிப்பிடப்படும் ஆன்டி ஆக்சிடண்டும் கூட!
இதை உணர உயிரியல் கடிகாரம் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஏனெனில், உடல், மனம் போன்றவற்றை சீராக இயக்க உதவும் இத்தகைய இயற்கை கடிகாரம், மெலட்டோனின் என்ற ஹார்மோனை அதிகளவில் சுரக்க உதவுகிறது.

Pineal Gland மூலமாக உற்பத்தியாகும் இந்த ஹார்மோன், உடலில் ஏற்படுகிற தேமல், முதுமைத் தோற்றம் மற்றும் முடி உதிர்தல் ஆகிய பாதிப்புக்களைத் தடுக்க பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பகல் நேரத்தின் 16 மணிநேர உழைப்புக்கு/நம் உடலின் இயக்கத்துக்கு இரவில் 8 மணிநேர தூக்கத்தை(Sleep-Wake Cycle) முறைப்படுத்தவும் இந்த ஹார்மோன் உதவுகிறது.

பொதுவாக தன் வேலைகளை அசதி காரணமாக, சரிவர செய்ய இயலாமல் பின்னடைவைச் சந்திக்கிற நபர்களுக்கு உடல், மன இயக்க கடிகாரத்தை(Circadian rhythm) ஒழுங்குபடுத்தவும் குறுகிய கால சிகிச்சையாக மாத்திரை வடிவில் மெலட்டோனின் ஹார்மோன் பரிந்துரைக்கப்படுகிறது. அத்தகைய மெலட்டோனினை இயற்கையாகவே வழங்குவதுதான் தூக்கம் என்பது வியப்புக்குரிய ஒன்றுதானே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *