இந்த நாட்டில் ஒருபோதும் பிரிவினைவாதத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது!

“2009ஆம் ஆண்டு பிரிவினைவாதம் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டிருந்த போதும்இ ஒரு சில தமிழ் புலம்பெயர்ந்தோர் பிரிவினைவாத சிந்தனைக்கு தொடர்ச்சியாக நிதியுதவியளிப்பதை நாம் தடைசெய்யவேண்டும்” என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

“கொவிட் -19 க்கு பின்னரான மறுமலர்ச்சி – இலங்கையின் தற்போதைய மற்றும் எதிர்கால வளர்ச்சி” எனும் தொனிப்பொருளில் “ஹரிமக அமைப்பினால்” இலங்கை மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போருக்குப் பின்னரான காலங்களில் முன்னாள் போராளிகள் 12 ஆயிரத்து242 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த சிலர் அல்லது புலிகள் சார்ந்த அமைப்புக்கள் நிதி சேகரிக்கும் நோக்கில் அவர்களின் பிரிவினைவாத சிந்தனையை தூண்டி அதற்கு மேலும் உரமூட்டும் வகையில் செயற்படுகின்றனர்.

“இந்த நாட்டில் ஒருபோதும் பிரிவினைவாதத்திற்கு இடமளிக்கப்படமாட்டது என்பதை நான் உங்களுக்கு உறுதிப்படுத்துகிறேன்.

2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் புலனாய்வு அமைப்புகளுக்கு 97 முறை முன்கூட்டியே எச்சரிக்கைகள் கிடைத்தன. இருந்தபோதும், பொறுப்பானவர்கள் அதன் பாரதூரமான விளைவுகள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. இதனால் சுமார் 290 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளைத் தடுக்கவும் சுமார் 500 பேர் காயமடைவதை தடுக்கவும் தவறிவிட்டனர்.

“எமது இராணுவ புலனாய்வு அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டமை மற்றும் புலனாய்வுத்துறையில் உள்ளோர் வெளியேறியமை என்பன தீவிரவாதிகள் சுதந்திரமாகவும் கட்டமைப்பாகவும் செயற்படுவதற்கு வழிசமைத்தது.

“கடந்த வாரம் கூட, நாம்இ 1.5 கிலோகிராம் உயர் ரக வெடிபொருட்கள் மற்றும் 90 டெட்டனேட்டர்களை மன்னார் பிரதேசத்திலிருந்து கைப்பற்றியுள்ளோம். அத்தோடுஇ ஒரு சில தொலை கட்டுப்பாட்டு கருவிகளும் (ரிமோட் கொன்ட்ரோலர்கள்) எம்மால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் நாம் பராமுகமாக செயற்பட்டிருந்தால் இவைகளை எம்மால் மீட்டிருக்க முடியாது.

வடக்கில் பிரிவினைவாதமோ கிழக்கில் தீவிரவாதமோ நாட்டில் அச்சத்தையும் அழிவையும் ஏற்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

சிறைச்சாலைகளிலிருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தலை இல்லாமல் ஒழிப்பதற்கான
நடவடிக்கைகள் குறித்தும் அவர் தெரிவித்த போது..

“சிறைச்சாலைகளில் இருந்து முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிராக எதிர்வினையாற்றக்கூடிய திறமைமிக்க அதிகாரிகளை சிறைச்சாலை திணைக்களம் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படை ஆகியவற்றிற்கு நாம் நியமித்துள்ளோம்.

மோசமான குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைவைக்கபட்டுள்ள பூச மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளின் அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டள்ளன.

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் நலன்புரி நடவடிக்கைப் பிரச்சினைகள் – அளவுக்கதிகமாக காணப்படும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கைகளை குறைப்பது தொடர்பாகவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்வில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் கட்டளைத்தளபதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரஇ சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல் தெனியஇ மற்றும் ஹரிமக நிறுவனத்தின் தலைவர் கனிஷ்க டி சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *