30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரே நாளில் ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று!

30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரே நாளில் 1,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ளது. ஆசியா, அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பியா நாடுகள் முழுவதும் கண்ட தொற்றாக கொரோனா வைரசின் பாதிப்பு காணப்படுகிறது.  இவற்றை எதிர்கொள்ள ஒவ்வொரு நாடும் போராடி கொண்டிருக்கின்றன. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையொன்றில், நாளொன்றுக்கு 1,000 முதல் 10 ஆயிரம் பேர் வரை பாதிப்பு ஏற்படும் நாடுகளில் லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளே உள்ளன என தெரிவித்து உள்ளது. இதன்படி, ஒரே நாளில் 1,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது 30க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது. 

பெரு நாட்டில் 9,441 பேரும்,
அர்ஜென்டினாவில் 7,498 பேரும் பாதிப்படைந்து உள்ளனர்.  மெக்சிகோ 7,371, சிலி 2,077, பொலிவியா 1,388, டொமினிகன் குடியரசு 1,354, வெனிசுலா 1,281, கவுதமாலா 1,144, கோஸ்டாரிகா 1,072, பனாமா 1,069, ஈக்வடார் 1,066 பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதேபோன்று ஐரோப்பிய நாடுகளை எடுத்து கொண்டால், ஸ்பெயினில் 5,479 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.  ரஷ்யாவில் இந்த எண்ணிக்கை 5,061 ஆக உள்ளது. பிரான்ஸ் 2,667, உக்ரைனில் 1,847, இங்கிலாந்து 1,440, ஜெர்மனி மற்றும் ருமேனியா 1,415 பாதிப்புகளையும் கொண்டுள்ளன.

ஆசிய நாடுகளில் பிலிப்பைன்ஸ் 6,134, ஈராக் 4,013, ஈரான் 2,501, வங்காளதேசம் 2,766, இந்தோனேசியா 2,307, கஜகஸ்தான் 1,847, சவுதி அரேபியா 1,383, ஜப்பான் 1,360, துருக்கி 1,226 என்ற எண்ணிக்கையை கொண்டுள்ளன.
இவை தவிர்த்து ஆப்பிரிக்க நாடுகளில், தென்ஆப்ரிக்கா 6,275, மொராக்கோ 1,306 மற்றும் எத்தியோப்பியா 1,038 ஆகிய 3 நாடுகளில் நாளொன்றுக்கு 1,000 முதல் 10 ஆயிரம் வரை பாதிப்புகள் பதிவாகின்றன. அதேவேளையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் கொண்ட நாடுகளின் வரிசையில் நான்கு நாடுகள் முதலிடத்தில் உள்ளன.  அவற்றில் இந்தியாவில் தினமும் 65 ஆயிரத்திற்கு கூடுதலாகவும், அதனை தொடர்ந்து பிரேசில் 60,091, அமெரிக்கா 52,799, கொலம்பியா 11,286 ஆகிய நாடுகளும் அதிக எண்ணிக்கையை கொண்டுள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *