பாராளுமன்ற கதிரைக்காக மோதிக் கொள்ளும் தேரர்கள்!

அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கு மாத்திரமே உண்டு.
கிடைக்க பெற்ற ஒரு ஆசனம் அனைத்து தரப்பிற்கும் சாபகேடாக மாறியுள்ளது. என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்இ

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமயாக இல்லாதொழித் து அனைத்து இன மக்களும் பொது சட்டத்திற்கு அடிபணிய வேண்டும் என்பதற்காகவே இடம் பெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டோம்.
தேர்தலில்போட்டியிடுவதற்கு அங்கிகரிக்கப்பட்ட கட்சி ஒன்று இல்லாத காரணத்தினால் அபேஜன பல வேகய கட்சியில் போட்யிட்டோம்.
ஞானசார தேரர் உட்பட தேர்தலில் போட்டியிட தீர்மானித்தவர்கள் அனைவரும் இக்கட்சியில் கூட்டணியமைத்தோம். அப்போது கூட்டணியின் பொதுச்செயலாளராக நான் நியமிக்கப்ட்டேன்.
தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரம் கூட்டணிக்கு உண்டு என்பதை எழுத்து மூலமாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளோம்.
இடம் பெற்று முடிந்த பொதுத்தேர்தலில் எமது கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு எமக்கு ஊடகங்களில் வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை.
ஞானசார தேரர் உட்பட தேர்தலில் போட்டியிட தீர்மானித்த அபேஜன பலவேகய அமைப்பின் உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் நேரடியாக சென்று கொள்கைகளை வெளிப்படுத்தினார்கள்.

அதுவே 67 ஆயிரம் வாக்குகளை எமக்கு பெற்றுக் கொடுத்தது பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் குருநாகலை மாவட்டத்தில் போட்டியி தாக்கல் செய்த வேட்புமனு இரத்து செய்யப்பட்டது.
என்பதற்காக இந்த தேசிய பட்டியல் ஆசனத்தை பயன்படுத்துவோம். வெகுவிரைவில் சிறந்த தீர்மானம் எடுக்கப்படும். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *