நியூசிலாந்தில் மீண்டும் பரவியது கொரோனா !

உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவான நாடுகளில் ஒன்றான நியூசிலாந்தில், கொரோனா பரவ தொடங்கிய கடந்த மார்ச் இறுதியில் தேசிய அளவில் எச்சரிக்கை விடப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பயனாக, கொரோனாவில் இருந்து விடுபட்டு விட்டோம் என பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தரப்பில் கடந்த ஏப்ரலில் அறிவிக்கபட்டது. நியூசிலாந்தில் அதுவரை 1,122 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 19 பேர் உயிரிழந்தனர்.

மேலும், கடந்த 102 நாட்களுக்கு பின்னர் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் மீண்டும் தொற்று கண்டறியப்பட்டது.  இதனையடுத்து பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் வைரஸ் பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்லாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நியூசிலாந்தில் இன்று 12 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டன.  இதனால், மொத்த பாதிப்பு 1,251 ஆக உயர்ந்து உள்ளது.  இதுவரை 22 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனையடுத்து, இதுபற்றி அந்நாட்டு பிரதமர் ஆர்டன் கூறும்பொழுது, வைரசானது எங்கிருந்து வந்தது என்பது பற்றி விசாரணை தொடர்ந்து வருகிறது.  எனினும் அதுபற்றி இன்னும் தெளிவாக தெரியவரவில்லை என்று தகவல் கூறினார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *