நீதி அமைச்சுப் பதவி கிடைப்பதை தடுக்க சதி முயற்சி நடந்தது!

தனக்கு அமைச்சுப் கிடைப்பதை தடுப்பதற்கான சதி முயற்சியொன்று நடந்ததாக, நீதி அமைச்சர் அலி சப்ரி இணையத்தள செய்தியொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில்  3 ஆவது முஸ்லிம், நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அலி சப்ரி இதுபற்றி மேலும் குறிப்பிட்டதாவது,

இன்று புதன்கிழமை, 12 ஆம் திகதி நான் நீதியமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டேன். எனினும் நான் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்ளக் கூடாது என சில சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் அந்த சதி முறியடிக்கப்பட்டு, நான் நீதி அமைச்சராக பதவியேற்றேன். சதிகளை முறியடிப்பதிலும், எனக்கு நீதி அமைச்சப் பதவி கிடைக்க வேண்டுமென்பதிலும் ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியாக நின்றனர். இதனால் சதி முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாக்கு, ஏன் அமைச்சுப் பதவிகள் கிடைக்கவில்லை என்பது எனக்குத் தெரியாது.

எனது கடமையை, எமது தேசத்திற்கு நான் உரியமுறையில் செய்வேன். ஆட்சியாளர்களுக்கு நான் முழு விசுவாசமாகவும், கட்சிக்கு என்னால் முடிந்த அர்ப்பணிப்பையும் செய்துள்ளேன்.
ஆதனால் எனக்கு இந்த அமைச்சுப் பதவி கிடைத்தது இதனை முழு நாட்டுக்கும் கௌரவமாக கருதுகிறேன் எனவும் புதிதான நியமிக்கப்பட்டுள்ள அலி சப்ரி மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *