பிரதமர் ஒன்லைன் விண்ணப்பப் படிவத்தை ஆரம்பித்து வைத்தார்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (11) அலரிமாளிகையில் உத்தியோகபூர்வமாகப் பணிகளைப் பொறுப்பேற்று சிறிது நேரத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள ஒன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தனது தகவல்களைப் பூரணப்படுத்தி பராளுமன்ற செயலகத்திடம் ஒப்படைத்தார்.
பிரதமரினால் ஒன்லைன் விண்ணப்பப் படிவம் பூர்த்திசெய்யப்பட்டு கையளிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க, உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி ஜயதிலக உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று கலந்துகொண்டது.

ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் தகவல்களை ஒன்லைன் முறையில் (Online Registration System) பெற்றுக்கொள்ளும் முறையொன்று பாராளுமன்ற செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒன்லைன் விண்ணப்பப் படிவத்தை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுதாரணமாக அமையும் வகையில் பூரணப்படுத்தி கையளித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *