காந்தியிடம் Quit India என்ற பெயரை எழுதிக் கொடுத்த இஸ்லாமியர்!

75 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் ஆங்கிலேயருக்கெதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் காந்திஜியின் கையில் ஒருவர் ஒரு துண்டுச் சீட்டைத் திணித்தார். அதனைத் திறந்து பார்த்தார் காந்திஜி. அதில் #Quit_India என்று எழுதப்பட்டிருந்தது.

இரண்டே பதங்களில் பளிச்சென்று செய்தியைச் சொன்ன இந்தப் பெயர் காந்திஜிக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. மக்களின் மனங்களில் மிக எளிதாகப் பதியும் இந்த இரண்டு வார்த்தைகள்தாம் இந்த இயக்கத்தின் பெயர் என்று தீர்மானித்த காந்திஜி துண்டுச் சீட்டைக் கொடுத்தவர் யார் என்று நிமிர்ந்து பார்த்தார். அவர்தான் #யூஸுஃப்மெஹர்அலீ!

39 வயதான யூஸுஃப் மெஹர் அலீ ஆங்கிலேயருக்கெதிரான போராட்டத்தில் 8 முறை சிறை சென்றவர். சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஓர் இதிகாசமாக மாறிய Quit India Movement என்ற #வெள்ளையனே_வெளியேறு இயக்கத்திற்கான பெயரை காந்திஜிக்குக் கூறியதே ஒரு முஸ்லிம்தான் என்பது இங்கே நினைவு கூரத்தக்கது.

சுதந்திரப் போரின் ஒவ்வொரு அங்குல நகர்விலும் முஸ்லிம்களின் பங்கு இருந்து கொண்டே இருந்திருக்கின்றது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *