மக்கள் வரிப்பணத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சலுகைகள் என்ன?

சம்பளம்

01) நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளம் – ரூபா 54285/=
02) பிரதி அமைச்சர் – ரூபா 63500/=
03) இராஜாங்க / அமைச்சரவை அமைச்சர் – ரூபா 65000/=
04) சபாநாயகரின் சம்பளம் – ரூபா 68500/=
05) பிரதமர் – ரூபா 71500/=

சம்பளத்திற்கு மேலதிகமாக

* அலுவலக கொடுப்பனவு – ரூபா 100000/= (ஒரு இலட்சம்)

* போக்குவரத்து கொடுப்பனவு – ரூபா 10000/=

* தொலைபேசி கொடுப்பனவு – ரூபா 50000/= (அலுவலகம்)

* மொபைல் தொலைபேசி கொடுப்பனவு – ரூபா 50000/=

* இலவச அஞ்சல் கொடுப்பனவு ரூபா 350,000/= (மூன்றரை இலட்சம்)

* டிரைவர் மற்றும் விருந்தோம்பல் கொடுப்பனவு ரூபா 45000/=

* பாராளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு ஒரு நாளைக்கு ரூபா 2500/= , ஒரு மாதத்தில் குறைந்தது 8 நாட்களுக்கு அமர்வு நடைபெறுகிறது, அதன்படி மாதத்திற்கு ரூபா 20000/= பெறப்படுகிறது.

* கூட்டமில்லாத நாட்களில் குழு கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான கொடுப்பனவு ரூபா 2500/= (மாதாந்தம் 5 குழு நாட்கள் , அதன்படி மாதாந்தம் ரூபா 12,500/=)

* ஒருங்கிணைப்பு செயலாளருக்கு 218 லிட்டர் எரிபொருளுக்கு ரூபா 17440/=

* இராஜாங்க/ அமைச்சரவை அமைச்சு ஊழியர்களுக்கு 05 வாகனங்கள்

* பிரதி அமைச்சு ஊழியர்களுக்கு 03 வாகனங்கள்.

* குறிப்பாக, ஒருங்கிணைப்பு செயலாளர் மற்றும் தனியார் செயலாளர் பதவிகளுக்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர் நியமிப்பது அனுமதிக்கப்படுகிறது. அந்த பதவிகளுக்கு எரிபொருள் கொடுப்பனவு மற்றும் தொலைபேசி கொடுப்பனவு என்பன மேலதிகமாக வழங்கப்படுகின்றன

* கூடுதலாக, சொகுசு வாகனங்கள் வாங்குவதற்கு கட்டணமில்லா உரிமங்கள் கிடைக்கின்றன. ரூபா 30-40 லட்சத்திற்கு வாங்கிய வாகனங்களை ரூபா 25 மில்லியனுக்கு விற்கலாம்.

* பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்படும்போது ரூபா 50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மேலும், பாராளுமன்ற உறுப்பினரின் காப்பீட்டுத் தொகை ரூபா 20 லட்சம்.

* கூடுதலாக, ஒரு ஆடம்பர உத்தியோகபூர்வ வீடு

* காலை உணவு மற்றும் மதிய விஷேட உணவிற்கு பாராளுமன்றம் ரூபா 150/= மாத்திரமே அறவிடுகிறது.

* ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் கிடைக்கிறது.

* கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலைகளில் குழந்தைகளுக்கு அனுமதி

* V.I.P வெளிநாட்டு பயணம், உயர்மட்ட ஹோட்டல்களில் தங்குமிடம் மற்றும் பயணத்திற்கான சிறப்பு விஷேட சலுகைகள்

இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 225 பேரும் பொதுமக்களின் வரிப் பணத்தால் 05 ஆண்டுகளுக்கு பராமரிக்கப்படுகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *