பாராளுமன்றத்திற்கு 47 தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் தமிழ், முஸ்லிம்கள் சார்பில் வாக்களிப்பு மூலம் 41 பிரதிநிதிகளும், தேசியப்பட்டியல் மூலம் 6 பிரதிநிதிகளும் தெரிவாகியுள்ளனர். தமிழர்கள் சார்பில் 28 உறுப்பினர்களும்,முஸ்லிம்கள் சார்பில் 19 பிரதிநிதிகளும் இதில் அடங்குகின்றனர்.

யாழ். தேர்தல் மாவட்டம்

இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் சிவ ஞானம் சிறிதரன், எம்.ஏ சுமந்திரன், தர்மலிங் கம் சித்தார்த்தன் ஆகியோரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அங்கஜன் இராமநாதனும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தாவும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரனும் வெற்றி பெற்றுள்ளனர்.

வன்னி தேர்தல் மாவட்டம்

இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் சார்ள்ஸ்நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோரும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரிஷாட் பதியுதீனும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் காதர் மஸ்தானும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் குலசிங்கம் திலீபனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டம்

இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் இரா.சம்பந்தன் வெற்றி பெற்றுள்ளார். ஐக்கியமக்கள் சக்தி சார்பில் எஸ்.எம்.தெளபீக், இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்சார்பில் பிள்ளையான் என அறியப்படும்சிவநேசத்துரை சந்திரகாந்தனும், இலங்கைத்தமிழரசுக் கட்சி சார்பில் இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும்,ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில்சதாசிவம் வியாழேந்திரனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஹாபீஸ் நஸீர் அஹமட்டும் வெற்றிபெற்றுள்ளனர்.

அம்பாறை மாவட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எம்.எச்.எம்ஹரீஸ், பைஸல் காசீம் ஆகியோரும், தேசிய
காங்கிரஸ் சார்பில் ஏ. எல்.எம். அதாவுல்லாவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் மொஹமட் முஸாரப்பும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரவூப் ஹக்கீம்,அப்துல் ஹலீம், எம். வேலுகுமார் ஆகியோர்வெற்றி பெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன், மயில்வாகனம் உதயகுமார் ஆகியோரும், ஸ்ரீலங்காபொதுஜன முன்னணி சார்பில் ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோ ரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வடிவேல்சுரேஷ், அ.அரவிந்தகுமார் ஆகியோர் வெற்றி
பெற்றுள்ளனர்.

கேகாலை மாவட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கபீர் ஹாசீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் மாவட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இசாக் ரஹ்மான் வெற்றி பெற்றுள்ளார்.

கொழும்பு மாவட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எஸ்.எம் மரிக்கார், முஜிபுர் ரஹ்மான, மனோ கணேசன்ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டம்

முஸ்லிம் தேசியக் கூட்டணி சார்பில் அப் துல் அலி சப்ரின் வெற்றி பெற்றுள்ளார்.

தேசியப் பட்டியல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில்நான்கு சிறுபான்மையின பிரதிநிதிகளுக்கு
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

கலாநிதி சுரேன் ராகவன், ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி, மொஹமட் முஸம்மில், வர்த்தகர் மொஹமட் பலீல் மர்ஜான் ஆகியோருக்கு தேசியப் பட்டியல் உறுப்புரிமை கிடைத்துள்ளது.

இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என்பவற்றுக்கு தலா ஓர் தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *