கணவன் மனைவி தோல்வி நான்கு தந்தை மகன் ஜோடிகள் தெரிவு

நான்கு தந்தை – மகன் ஜோடிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். முதலாவது ஜோடியாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ச ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

அத்துடன் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச மற்றும் அவரது மகன் ஷஷிந்திர ராஜபக்ச ஆகியோரும், முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் அவரது மகன் பிரமித பண்டார தென்னகோன் ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.

தினேஷ் குணவர்தன தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள நிலையில், அவரின் மகனுக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பாராளுமன்றத்தில் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகன் சத்துர சேனாரத்ன ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டனர். எனினும் சத்துர சேனாரத்ன இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை,  கடந்தமுறை கணவன் தயாகமகேயும், மனைவி அனோமா கமகேயும் சபையில் அங்கம் வகித்தனர். இம்முறை இருவரும் தோல்வியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *