பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்கள் 2021 வரை வீட்டில் இருந்தவாறு பணியாற்ற அனுமதி!

2021 ஆண்டு ஜூலை மாதம் வரை பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்கள் வீட்டிலேயே இருந்த படி பணியாற்ற அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வருகின்றது. கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பதால் உலகில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டது. எனவே தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்த படி பணியாற்ற அந்தந்த நிறுவனங்கள் அறிவுறுத்தி இருந்தது. இதனால் கடந்த சில மாதங்களாக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் பேஸ்புக் நிறுவனம் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதாவது, கொரோனா தாக்கம் குறைவாக உள்ள இடங்களில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மிகக்குறைந்த அளவிலான ஊழியர்களுடன் அலுவலகங்கள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்தாண்டு இறுதி வரை அலுவலகங்களை திறக்க வாய்ப்பில்லை என பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது

அதனையடுத்து நிபுணர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில், அடுத்த ஆண்டு ஜூலை வரை ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற பேஸ்புக் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. வீட்டில் இருந்த படி பணியாற்றும் ஊழியர்களின் அலுவலக தேவைகளுக்கு இந்திய மதிப்பில் ரூ.75 ஆயிரம் கூடுதலாக வழங்குவதாகவும் பேஸ்புக் நிறுவனம் அந்த அறிவிப்பில் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *