மொட்டு கட்சிக்கு 130 ஆசனங்கள் கிடைக்குமாம்!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 130 – 135 இற்கும் இடையிலான ஆசனங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக் கொள்ள முடியும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆரூடம் வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மதிப்பீடு அந்தளவில் இருந்தாலும் 150 ஆசனங்கள் எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு, வன்னி மற்றும் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறும் எனவும் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் இரண்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடும் போட்டி ஒன்று நிலவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் முழு நாட்டின் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொள்ளும் வாக்குகளின் பாதியேனும் ஏனைய கட்சிகளால் பெற்றுக் கொள்ள முடியாதென அவர் கூறியுள்ளார்.
தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணிக்கு அதிகளவான உறுப்பினர்கள் கிடைப்பதனை தான் விரும்புவதாக பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *