வியத்தகு வரலாற்றைக்கொண்ட நெடுந்தீவு!

இலங்கையிற்கு அழகை கொடுக்கும்
யாழ்ப்பாணத்தின் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் மிகப்பெரிய தீவுதான் இந்த நெடுந்தீவு.

யாழ்ப்பாணத்திலிருந்து 45கிலோமீற்றர் தொலைவிலும் . புங்குடுதீவு எனும் கிராமத்தில் இருந்து 10கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மற்ற அனைத்து தீவுகளிலிலும் மிகக்கூடிய தொலைவில் அமைந்திருக்கும் தீவு இதுவே ஆகும்
ஓல்லாந்தர்கள் இத் தீவை டெல்வ்ற் என்று பெயரிட்டு அழைத்தார்கள் இன்றும் ஆங்கிலத்தில் இத் தீவு இப்பெயராலேயே குறிப்பிடப்படுகிறது.

நெடுந்தீவு ,தலைத்தீவு, பசுத்தீவு பால்தீவு ,அபிசேகத்தீவு ,தயிர்த்தீவு முதலான பெயர்களால் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் அழைக்கப்பட்டு வந்துள்ளது. யாழ் குடா நாட்டில் இருந்து நெடுந் தொலைவில் இருப்பதனால் இது நெடுந்தீவு என அம்மக்களால் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகின்றது

மன்னர் ஆட்சிக்காலம் தொடக்கம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரையிலான சரித்திர பூர்வமான கோட்டைகளும் கட்டிடங்களும் சின்னங்களும் வியத்தகு விருட்சங்களும் சவாரி செய்வதற்கும் வந்தோரை வரவேற்கவும் முன்னிற்கும் குதிரைகளும் இயற்கையளிக்கும் காட்சிகளான சூரியோதய அஸ்தமனக் காட்சிகளும் இதனை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றன
நெடுந்தீவு கட்டைக் குதிரைகளுக்கு பேர் பெற்ற ஓர் இடமாகும். இவை தன்னிச்சையாக நெடுந்தீவு வெளிகளில் மேய்ந்து திரிகின்றன. இங்குள்ள குதிரைகளும் கோவேறு கழுதைகளும் 1660ம் ஆண்டு முதல் 1675ம் ஆண்டு வரை வட பகுதியின் ஒல்லாந்த ஆளுனரான ரிஜிக் கொஸ்வேன் கொஹென்ஸ் இந்த தீவில் தங்கியிருந்த போது இந்த மிருகங்களை கப்பல்கள் மூலம் இத் தீவுக்கு கொண்டு வந்து இறங்கியிருக்கிலாம் என நம்பப்படுகின்றது

19ம் நூற்றாண்டில் அவை நோலான் என்ற பிரித்தானியரால் முறையாக வளர்க்கப்பட்டன. இத் தீவில் இருந்து இக் குதிரைகளை கொண்டு செல்ல முடியாது என்ற சட்டம் நெடுந்தீவில் வழக்கில் இருக்கின்றது

இக் குதிரைகள் யாவும் உயர் இனத்தை சார்ந்தவையாகும். இவற்றுக்காக ஒல்லாந்தர்கள் பல கிணறுகளையும் கேணிகளையும் கட்டி இருந்தார்கள். அத்துடன் பல குதிரை கட்டும் லாயங்களையும் அமைத்திருந்தார்கள் இவையின்றும் சிதைந்த நிலையில் நெடுந்தீவின் மேற்கே காணப்படுகின்றன.
இக் குதிரைகள் ஒல்லாந்தர் நாட்டை விட்டுப் போனதும் போதிய பராமரிப்பு இன்மையும் அவற்றை தேடுவாரின்மையும் அவை சுயேச்சையாக தீவின் தெற்கே உள்ள புல்வெளிகளில் சுதந்திரமாக திரிவதைக் காணலாம். இவை இன்றும் காட்டுக் குதிரைகளாக மாறி விட்டன. இவற்றின் வாரிசுகள் வெல்லையென அழைக்கப்படுகின்றன.
புல்வெளிப் பிரதேசத்தில் கூட்டம் கூட்டமாகத் திரியும் காட்சி பார்ப்போர் கண்களுக்கு நல்ல விருந்தாகும் இன்று இவற்றின் தொகை குறைத்து கொண்டே செல்கின்றன. இக் குதிரைகள் நெடுந்தீவின் சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கிய ஓர் அம்சமாக விளங்குகிறது.

அத்தோடு இங்கு காணப்படும் ஓர் தொன்மையான மையமாக கூறப்படுவது 40 அடி மனிதனின் பாதச்சுவட்டினை ஒத்த பாதச் சுவடு ஆகும். இது நெடுந்தீவின் மேற்கில் சாறாப்பிட்டி கோளாங்கற் பாறைகளின் மத்தியில் காணப்படுகிறது. இது சாதாரண மனிதர்களின் பாதங்களை விட மிகவும் பெரியதாக காணப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *