சலுகை விலையில் ‘சிக்கன் சவர்மா’சாப்பிட்ட 800 பேர் வைத்தியசாலையில்!

மத்திய கிழக்கு நாடான ஜோர்டானில் கெட்டுப்போன இறைச்சியை உட்கொண்ட 800க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஐந்து வயது சிறுவன் ஒருவனும் உயிரிழந்துள்ளான்.

ஜோர்டானில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை நிலவி வரும் சூழலில் குளிர்சாதன வசதியில் இறைச்சியை பாதுகாக்காமல், அதை சவர்மா செய்ய பயன்படுத்தியதே உணவு நஞ்சாக மாறக் காரணம் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜோர்டான் தலைநகர் அம்மானின் உள்ள உணவகம் ஒன்றில் வழக்கமான விலையைவிட பாதி விலையில் ‘சிக்கன் சவர்மா’ விற்கப்படும் என்று உணவகம் ஒன்று சலுகையை அறிவித்துள்ளது.

சிக்கன் சவர்மா

அதன் காரணமாக அங்கு வழக்கமாக உணவு வாங்க வருவோரின் எண்ணிக்கை விட இரண்டு மடங்கு பேர் இறைச்சி உணவை வாங்கி உள்ளனர்.

ஆனால் கெட்டுப்போன இறைச்சி உணவு செய்ய பயன்படுத்தப்பட்டதால் அவர்களில் 826 பேருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து வயது சிறுவன் ஒருவனை மருத்துவர்களால் காப்பாற்ற இயலவில்லை என்று பெட்ரா செய்தி முகமை தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த உணவகம் பயன்படுத்திய இறைச்சியில் பாக்டீரியா இருந்ததாக ஆய்வக சோதனைகள் கூறுகின்றன என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த உணவகத்தின் உரிமையாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *