இலங்கை நாடு மஹிந்த ராஜபக்சக்களின் பரம்பரை சொத்தல்ல!

இந்த நாடு மஹிந்த ராஜபக்சக்களின் பரம்பரை சொத்தல்ல. பரம்பரை அரசியல் என்பதை ஒருபோதும் அனுமதியோம். இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைமைத்துவம் தேவைப்பட்டது.
அதுவும் பௌத்த நாடான இந்த நாட்டையும், பௌத்தர்களையும் பாதுகாக்கும் சுத்தமான ஒரு பௌத்தனின் தேவை எமக்குத் தேவைப்பட்டது.

எதற்கும் அசைந்து கொடுக்காது எந்த அடிப்படை வாதத்திற்கும் அடிபணியாத நல்ல பௌத்த தலைவன் தேவைப்பட்டதால் கடந்த பொதுத் தேர்தலில் 69 இலட்சம் தனி பௌத்த மக்களின் வாக்குகளோடு நாம் கோட்டாபய ராஜபக்சவைத் தெரிவு செய்தோம் இந்த 69 இலட்சம் வாக்குகளுக்கும் மூலகர்த்தாக்கள் நாம் தான் என்பதை மிகவும் ஆணித்தனமாக கூறிக் கொள்கிறேன் என  கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். மாத்தளை நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,
தமிழ் முஸ்லிம்களின் வாக்குகள் இல்லாமல் எவரும் வெற்றியடைய முடியாது என்ற அடிப்படை வாதிகளின் போலிவாதங்களை நாம் ஜனாதிபதித் தேர்தலில் உடைத்தெறிந்துவிட்டோம்.

நடக்க போகும் ஆகஸ்ட் மாதத் தேர்தலின் போது இந்த நாட்டு பௌத்தர்கள் ஓரணியாக திரண்டு கலப்படம் இல்லாத ஒரு பாராளுமன்றத்தை உருவாக்க முன்வர வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *