அவுஸ்திரேலியா நாட்டின் முதல் பள்ளிவாசல் !

அவுஸ்திரேலிய நாட்டின் தெற்கு அவுஸ்திரேலிய மாகாணத்தின் வடக்கு மேய்ச்சல் நிலத்தில் இருக்கும் ஒரு பாலை பகுதி மர்ரே நகரம். இது அவுஸ்திரேலிய ஆஸ்த்தான பழங்குடிகளான தியாரி ஆபரிஜின்களின் குடியேற்றப்பகுதி ஆகும். இங்கு 1800களில் குடியேறிய பிரிட்டிஷ்-இந்திய ஆப்கானிகள் , 1861ல் தங்களது வழிபாட்டிற்காக ஒரு சிறிய ஓலைக்குடிசை பள்ளிவாசலை நிர்மாணித்துள்ளனர். இதுவே அவுஸ்திரேலியாவின் முதல் பள்ளிவாசலாகும்.

1930களில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு பெட்ரோலிய வாகனங்கள் வருவதற்கு முன் ஒட்டகங்கள் தான் பிரதான போக்குவரத்தாக இருந்து வந்துள்ளது. பாலைவன பிராந்தியமான மரேயில் ஒட்டகங்கள் மேய்க்கவும், பழக்கவும், இனப்பெருக்கம் செய்யவுமாக குடியேறிய ஆப்கானிகள் தலைவர் அப்துல் காதிர் என்பவர் தான் இந்த ஓலைக்குடிசை பள்ளிவாசலை வேய்ந்தது, இதன் இமாமாக இருந்தவர் முல்லா ஆசிம் கான் என்பவராவார். சுமார் 3,000 பேர் கொண்ட அந்த கான்கள் இனத்திற்காக கட்டப்பட்ட முதல் பள்ளிவாசலாக மரே பள்ளிவாசல் உள்ளது. உள்நாட்டு பழங்குடிகளோடு திருமண உறவுகளிலும் ஈடுபட்ட கான்களின் எண்ணிக்கை மேலும் பெருகியது.

மோட்டார் வாகன போக்குவரத்து தொடங்கிய பிறகு ஒட்டகத்திற்கான தேவை குறைந்தது எனவே அவர்கள் 1920வாக்கில் நகரையே காலி செய்துவிட்டு வெவ்வேறு இடங்களிலும் புலம்பெயர்ந்துவிட்டனர். 1956வரை அவ்வப்போது வந்துபோகும் கான்கள் அங்கே தொழுகை நடத்தி வந்துள்ளனர் அதற்கு பிறகு அப்பள்ளிவாசல் கைவிடப்பட்டுவிட்டது. எனினும் தெற்கு ஆஸ்திரேலிய அரசு அந்த பள்ளிவாசலை தத்தெடுத்து பாரம்பரிய இடமாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. முற்றிலும் அழிந்துபோன நிலையில் மீண்டும் 2003ம் ஆண்டு அந்நாட்டு அரசு இப்போதுள்ள ஒரு மாதிரி பள்ளிவாசலை நிர்மாணித்தது. கடந்த ஆண்டு The Camalliers Park என அவ்விடத்தை சுற்றுலாத்தலமாக அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டில் ஆங்கிலேயர்களின் வரவுக்கு முன்பாகவே அங்கு இஸ்லாமிய குடியேற்றம் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *