ஹக்கீமின் கொட்டத்தை அடக்குவோம்!ஞானசார தேரர்

உலகில் பௌத்தர்களுக்கென உள்ள ஒரே ஒரு நாடு இலங்கை மாத்திரமாகும். இதனை பௌத்த நாடாக நிரூபிக்க வேண்டிய தேவை எமக்குள்ளது. அதனை நாம் நீண்ட காலமாக கூறி வருகிறோம். இதனை கூறும் போது எம்மவர்களே எங்களை அடிப்படை வாதிகளாக கூறினர். தற்போது ஹக்கீம் தலைமையிலான குழு அம்பாறையை முஸ்லிம்களது மாவட்டமாக பிரகடனம் செய்துள்ளார்கள். இப்போது யார் அடிப்படை வாதிகள் என நேற்று பொதுபல சேனாவின் தலைமை காரியாலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஞானசார தேரர் கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்..

அம்பாறை முஸ்லிம்களது பூர்வீக மாவட்டமல்ல. இப்போது சனத்தொகையில் வேண்டும் என்றால் கூடுதலாக இருக்கலாம். தீக்கவாபியை அண்டி 12 000 இற்கும் மேற்பட்ட நிலங்கள் எங்களுக்கு சொந்தமானது. அதனை மீள கைப்பற்றுவோம். தீகவாபியை தளமாக கொண்டு பௌத்த இராஜ்சியம் தீகவாபியில் நிறுவப்படும். இதனை நிறுவுவதன் மூலம் அம்பாறை எங்களது மாவட்டம் என்ற ஹக்கீமின் கொண்டத்தை அடக்குவோம்.

நாங்கள் அம்பாறை விடயங்களில் பல தடவைகள் நுழைய முயற்சித்தோம். எங்களவர்களே எங்களுக்கு எதிரியாக இருந்தனர். இப்போது அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள். அம்பாறையிலுள்ள முஸ்லிம் அடிப்படை வாதம் இப்போது புரிந்திருக்கும். இனியும் நாங்கள் அம்பாறைக்குள் நுழைய எங்களவர்கள் தடையாக இருக்க மாட்டார்கள் என நினைக்கின்றோம்.

இது தொடர்பில் சங்கைக்குரிய பௌத்த மஹா சங்கங்களுக்கு ஹக்கீம் குழுவினர் பேசிய ஆதாரத்தை சமர்பித்துள்ளோம். அவர்களது ஆதரவோடு நாங்கள் அம்பாறைக்குள் நுழைந்து விளையாடுவோம். அம்பாறையில் முஸ்லிம் அடிப்படை வாதத்தால் வாடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கும் விடிவை பெற்றுக் கொடுப்போம். கல்முனை தமிழ் பிரதேச செயலகம், வாளத்தப்பட்டி பிரதேச சபை என பல்வேறு தேவைகள் தொடர்பாக தமிழ் சமூகம் எங்களிடம் முறையிட்டுள்ளன.

ஹக்கீம் குழு அம்பாறை முஸ்லிம்களது மாவட்டம் என பிரகடனப்படுத்தி இருப்பதால், அம்பாறை பௌத்த நாடான இலங்கையில் உள்ள ஒரு மாவட்டமே என நிறுவும் வகையில் அம்பாறை முழுக்க எங்களது மத அடையாளம் நிறுவப்படும். இதற்கு தமிழ் சமூகம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக கூறியுள்ளனர். தீகவாபியை மையமாக கொண்டு தனியான பிரதேச சபை, பிரதேச செயலகம் நிறுவப்படும். இதன் மூலம் அம்பாறையை பௌத்த மாவட்டமாக பிரகடனம் செய்வதோடு, ஹக்கீமின் கொட்டத்தையும் அடக்குவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *