முஸ்லிம் சமூகம் முஸ்லிம் தலைமைத்துவத்தின் காரணமாகவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது!

விடுதலைப்புலிகள் 30 வருடங்களாக செய்ததை மறக்க மன்னிக்க தயாராவுள்ள சர்வதேச சமூகம் இன்னமும் தொடர்ந்தும் பாதுகாப்பு படையினரை குற்றம்சாட்டி வருகின்றது இது தவறு என்பதே எங்கள் வாதம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
வடபகுதியில் நாங்கள் மீண்டும் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவேண்டும்,வடக்குகிழக்கு பகுதிகளுக்கு சமமான வாய்ப்பை வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளது.

காணாமல்போனவர்கள் விவகாரம்

2011 இல் ஜனாதிபதி கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார்.
நீங்கள் காணாமல்போனவர்கள் குறித்து பேசும்போது வடபகுதி குடும்பங்களை சேர்ந்தவர்கள் மாத்திரம் காணாமல்போகவில்லை,நாங்கள் இன்னமும் பின்னோக்கி பார்க்கவேண்டும்,86 முதல் 88 89 2009 வரை பார்க்கவேண்டும்.
காணாமல்போனவர்கள் விவகாரம் மிகவும் உணர்வுபூர்வமானது என்பது எனது கருத்து.

அனேக தமிழ் அரசியல்வாதிகள் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இது அரசியல் விடயம்.

ஆனால் தங்கள் பிள்ளைகள் காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு இது மிகவும் உணர்வுபூர்வமான விடயம்.
நாங்கள் 90 களில் தென்பகுதியில் இதனை தனிப்பட்ட ரீதியில் பார்த்திருக்கின்றோம்.

அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம்-

இது சரியா பிழையா என்பதற்கு அப்பால் இது சர்வதேச சமூகத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை. வெளிநாடுகளுடனான உடன்படிக்கைகளை கையாளும்போது நாங்கள் எங்கள் கரிசனைகளையும் மட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளோம். நாட்டின் இறைமை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்கள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகளை நாங்கள் மேற்கொள்ளமுயல்வோம்.
முஸ்லீம் சமூகத்துக்கு எதிரான இனவாதம் குறித்து

முஸ்லீம் சமூகம் முஸ்லீம் தலைமைத்துவத்தின் காரணமாகவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஒரு தற்கொலை குண்டுதாரியின் தந்தை ஜேவிபியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டவர் என்பது தெரியவந்தவேளையும், சில அமைச்சர்கள் மீது ஆதாரஙகளுடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டவேளையும் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டார்கள்.

இதுவே முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கும் ஏனைய அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தெளிவான வித்தியாசமாகும்.
இங்கேயே இனவாதம் ஆரம்பமாகின்றது, இலங்கையில் இனவாதம் காணப்படுமாகயிருந்தால் முஸ்லீம்களே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *