கொரோனாவில் இருந்து தப்பிக்க தனித்தீவை வாங்கிய பணக்காரர்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க இந்திய ரூ47 கோடியில் அயர்லாந்தில் தனித்தீவு ஒன்றை ஐரோப்பிய பணக்காரர் ஒருவர் வாங்கி உள்ளார். அயர்லாந்து கடற்கரையில் உள்ள ஐரிஷ் நிலப்பரப்பின் தென்மேற்கே 157 ஏக்கரில் அமைந்துள்ள ஹார்ஸ் தீவு, நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்திய ரூபாயில் ரூ. 47 கோடி மதிப்பில் விற்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாட்டை சேர்ந்த ஒருவர், இந்த தீவை விலைக்கு வாங்கியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலில் இருந்து தப்பிக்க, பெரும் பணக்காரர்கள் தனியார் தீவுகளை நாடிய நிலையில், தற்போது ஒருவர் கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரு தீவையே விலைக்கு வாங்கியுள்ளார்.

பச்சை நிலப்பரப்புகளை கொண்ட இந்த தீவில், ஒரு பிரதான வீடு மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலை சுற்றியுள்ள தீவுகளில் மக்கள் நடமாட்டம் இல்லாத தீவாக உள்ளது. படகு சவாரி வசதி, ஒரு ஹெலிபேட், ஒரு விளையாட்டு மைதானம், வீடு மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியன உள்ளன. மேலும், மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதிகளும் ெகாண்டுள்ளன. பிரதான வீட்டில் 4,500 சதுர அடி தரை பரப்பளவு மற்றும் ஆறு படுக்கையறைகள் உள்ளன. இதுகுறித்து மாண்டேக் ரியல் எஸ்டேட்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் பாலாஷேவ் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் தொற்று பரவி  வருவதால், சில பணக்காரர்கள் தீவுகளை விலைக்கு வாங்கி தங்கிவிடுகின்றனர்.

அவர்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத தொலைதூர இடங்களில் சொத்து அல்லது நிலத்தை வாங்குகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து சுற்றுலா தலம், ஓய்வு பயணங்களும் தடை செய்யப்பட்டதால், தனியார் தீவுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்திலிருந்து, உலகெங்கிலும் தனியார் தீவுக்கான முக்கியத்துவம் கூடி
யுள்ளது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *