கொரோனா தொடர்பான தகவல் சீன அரசுக்கு முன்னரே தெரியுமாம்!

கொரோனா பரவல் தொடர்பான சீன அரசுக்கு முன்னரே தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார் சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி.

சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.26 கோடியாக அதிகரித்துள்ளது. வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துவிட்டது. ஒரு புறம் வைரஸ் பாதிப்பு மற்றொரு புறம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு என அனைத்துமே மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. இந்த நேரத்தில், கொரோன பற்றிய தகவல்கள் முன்னரே சீன அரசுக்குத் தெரியும் எனக் கூறி பகீர் கிளப்பியுள்ளார் சீனாவை சேர்ந்த பெண் விஞ்ஞானி ஒருவர்.

ஹாங்காங்கில் இருக்கும் வைராலஜி மற்றும் நோயெதிர்ப்புத் துறையில் நிபுணத்துவம் பெற்ற லி மெங் யான் (Li-Meng Yan) என்ற பெண் விஞ்ஞானி நேற்று பாக்ஸ் நியூஸூக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள லி மெங் தான் இருக்கும் இடத்தைப் பற்றி குறிப்பிடாமல் பேசியுள்ளார். அதில், “கொரோனா தொடர்பாக உலகத்துக்கும் உலக சுகாதார நிறுவனத்துக்கும் உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டிய கடமை சீனாவுக்கு இருந்தது. ஆனால், கொரோனா பரவலை அறிந்தும் சீன அரசு அதை வெளியில் சொல்லாமல் இருந்ததாகவே நான் நினைக்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *