லொறி முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதியதால் 3 பேர் உயிரிழப்பு!

வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியின் வருணகம பிரதேசத்தில் லொறி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (10) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த விபத்தில் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *