மூன்று வாரங்களில் 11 இலங்கையர்கள் கொரோனாவால் மரணம்!

மூன்று வாரங்களில் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றிய 11 இலங்கையர்கள் கொவிட் 19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் என்று இலங்கை வௌிநாட்டுப் பணியகம் டெய்லி மிரர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளது.இதனையடுத்து கொவிட் 19 காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வடைந்துள்ளது.கடந்த ஜூன் மாதம் 19ம் திகதி வரை மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றிய 23 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, குவைத், கட்டார், ஓமான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் பணியாற்றிய இலங்கையர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் இருவர் மட்டுமே பெண்களாவர் என பணியக்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.உயிரிழந்த அனைவருக்கும் இறுதிக்கிரியைகள் அந்தந்த நாடுகளிலேயே செய்யப்பட்டுள்ளன. கொரோன தொற்று காரணமாக அச்சடலங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. குறித்த நபர்களின் உறவினர்கள் நிலைமையை புரிந்துக்கொண்டிருப்பார்கள் என்று நாம் நம்புகிறோம்.கொவிட் 19 தொற்று காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வந்த சுமார் 50,000 பெருஞ் சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. பாதுகாப்பு, குறைந்த தனிமைப்படுத்தல் வசதிகள் என்பன காரணமாக அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் தாமதங்கள் ஏற்பட்டன. எனினும் அதிகமானவர்களின் கோரிக்கைகள் அதிகமாகியதையடுத்து அம்மக்களை அழைத்து வரும் பணிகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தது.கடுமையான சுகாதார மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் மத்திய கிழக்கு நாடுகளில் கொவிட் 19 தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (வேளைத்தளம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *