தடுப்பு மருந்துக்காக தன்னையே பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர்!

பொதுவாகத் தடுப்பு மருந்து ஆராய்ச்சிகளை முதலில் பிராணிகளிடம் சோதித்துப் பார்ப்பார்கள். பிறகு மனிதர்களிடம் சோதிப்பார்கள்.

அதன் விளைவுகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகே அந்த மருந்தை வெளிச்சந்தைக்குப் புழக்கத்தில் விடுவார்கள்.

இது தான் வழக்கம்.

ஆனால் மகப்பேறு மருத்துவத்தில் நடந்த சிக்கலுக்காகத் தன்னை வைத்தே ஆராய்ச்சி நடத்திய மருத்துவரும் இருந்திருக்கிறார்.

அவர் தான் செமல்வியிஸ். 1844-ல் வியன்னா பல்கலைக் கழகத்தில் மகப்பேறு சிகிச்சையில் பட்டம் பெற்ற மருத்துவர்.
அப்போது பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் பெண்களில் பலர் ஜன்னி நோய்க்கு ஆளாகி உயிரிழந்து கொண்டிருந்தார்கள். ஏன் இப்படி இறக்கிறார்கள்?

மருத்துவரான செமல்வியிஸின் கேள்விக்கு உரிய பதில் இல்லை.
ஜன்னி வந்து இவ்வளவு பேர் ஏன் இறந்து போகிறார்கள்?

தொடர்ந்து ஆராய்ந்தார். பல மருத்துவமனைகளுக்குச் சென்றார். பாதிக்கப்பட்ட பெண்களைத் தொட்டுப் பார்த்துப் பரிசோதனைகளைச் செய்தார்.
பரிசோதிக்கும்போது தன் கைகளையோ, உடலையோ கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ளாமலேயே இந்த ஆய்வைச் செய்தார். கண்டுபிடிக்க முடியவில்லை.

கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். தன்னுடைலேயே பரிசோதனைக் களமாக்க முடிவு செய்தார்.
பிரசவத்தின்போது இறந்த பெண்ணின் உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து தன்னுடைய உடலுக்குள் செலுத்தினார். பிரசவ ஜன்னி என்று அப்போது அழைக்கப்பட்ட நோய் அவருக்குள் நுழைந்தது.

நோய் மெதுவாகத் தாக்குதலை ஆரம்பித்தது.

உடலுக்குள் தான் அனுபவித்து உணர்ந்ததைப் படிப்படியாகப் பதிவு பண்ணிக் கொண்டிருந்தார். நோய் தீவிரம் பெறும் வரை பதிவு செய்தார்.
நோய் தீவிரம் பெற்றபோது, அவர் உயிரிழந்திருந்தார். பிரசவ ஜன்னிக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

தன்னையே பரிசோதனைக் களமாக ஆக்கிக் கொண்ட மருத்துவரான செமல்வியஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *