திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 111 பேருக்கு கொரோனா!

பீகார் தலைநகர் பாட்னாவை அடுத்த பாலிகஞ்ச் பகுதியில் கடந்த 15ஆம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில்  நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் கலந்துகொண்டுள்ளனர். திருமணம் முடிந்த 2 நாட்களுக்கு பிறகு மணமகன் திடீரென உடல்நலக்குறை காரணமாக மரணமடைந்தார். கொரோனா  பரிசோதனை நடத்தப்படாமலே அவரின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் திருமணத்தில் கலந்துகொண்ட நெருங்கிய உறவினர்கள் சிலருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே விரைந்து செயல்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் திருமணத்தில் கலந்துகொண்ட  அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தினர். அதில் 111 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மணமகனின் குடும்பத்தினர் அதிகாரிகளுக்கு உரிய தகவல் அளிக்காமல் மணமகனில் உடலை தகனம் செய்துவிட்டதால், மணமகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாரா என்பதை அதிகாரிகளால் கண்டறிய முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனாவால் 50 பேர் மட்டுமே திருமண நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என விதியுள்ளபோது அதிகமான நபர்களை திருமணத்திற்கு அழைத்து மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினர் விதி மீறலில்  ஈடுபடுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமணத்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *