இலங்கையில் மறைந்துள்ள இயற்கை இரகசியம்!

இரத்தினபுரி  மாவட்டத்தி்ன்  kalthota  பகுதியில்  மறைந்துள்ள  ஓர்  இயற்கை இரகசியம் பற்றி  அறிவீர்களா?

  அதுவே  Duwili Ella!!!  முத்து  நீரை  வாரி இறைக்கும்  இவ் Duwili Ella  இன் உச்சியை  அடைவதே அநேக  hikers இன்  கனவாக  உள்ளது.

          இதுவென்ன பெரிய  இரகசியம்??  ஏனையன  போன்று  இதுவும் ஒரு  நீர்வீழ்ச்சி தானே என்று  நீங்கள் யோசிக்கலாம்.   இவ்   நீர்வீழ்ச்சியை   ஊடறுத்து பின்புறமாக  உள்ள  குகையே   இதன்   இயற்கை  இரகசியம்!!    பொதுவாக   குகைக்குள்   இருந்து நீர்வீ்ச்சியைப் பார்த்திருப்பீர். ஆனால் நீர்வீழ்ச்சிக்குள் உள்ள   குகையிலிருந்து   ஒய்யாரமாக  இயற்கைக் காட்சியைப்  பார்க்கும்  ஓர்  புது  அனுபவத்தை  இங்கு பெறலாம்…

   அங்கு இளைப்பாறும் அந்த நொடி பூமியையும் ஓர் சுவர்ககமாக உணர்வீர் !!!    இதோ   உங்களை அழைத்துச் செல்கிறோம்!!

  இதனை   இரு  தடங்களூடாக  அடையலாம்.  ஒன்று  Atanwala இலிருந்து  ஆரம்பிக்கிறது.அடுத்து Pallegama town அருகிலுள்ள  Rabukoluwa  ஊடாகவும்  இதனை அடையலாம்.

   Duwili ஐ நோக்கிய  பயணமானது  உங்களை  ஓர் விசித்திர  உலகிற்கு  அழைத்துச்  செல்லும்.காங்கிறீட் காட்டினுள் வாழும்  நாம்   அபூர்வ  மரங்கள் , பச்சைப்  புல்வெளிகள்  கொண்ட அப்பகுதியைக் கடந்து போகும் போது  தூய  காற்றின்  சுவாசத்தை  உணரலாம்.

   அத்தோடு வழியில்  இடையிடையே  குறுக்கிடும்  சிறு ஏரிகள் மனதிற்கும் மேனிக்கும் புதுத்தெம்பூட்டும்.  அந்தவகையில் Dumbara Ella இதி்ல் குறிப்பிடத்தக்கது.

   பின் ஓரிரு மணித்தியாலங்களில்  நாம் ஆவலுடன் எதிர்பார்த்த Duwili Ella இனை அடையலாம்.மிகக் கவனமாக அதன் உச்சியை அடையும் போது  முத்துப் போன்ற அதன் தெளிந்த நீருக்குப்  பின்னே  அவ் அபூர்வக் குகைவாயில் நம்மை வரவேற்று நிற்கும்.

   அக்  குகையினுள்  நுழைந்து  நம்  வாழ்நாளி்ல் அனுபவிக்காத,  எந்தவொரு  நவீன  சாதனத்திலும் கண்டிராத  ஓர் அற்புத இயற்கைக் காட்சியைக்  காண்பீர்கள்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *