டூப் சச்சினுக்கு கொரோனா தொற்று உறுதியானது!

கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கர் போன்ற முகமுடைய ‘டூப்’ சச்சினுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள உணவு சப்ளை நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் பால்வீர் சந்த் (5). இவர், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டல்கர் போன்ற உருவ, முக அமைப்பை உடையவர். சச்சினின் ரசிகர்களால், ‘மற்றொரு சச்சின்’ (டூப் சச்சின்) என்று அங்கீகரிக்கப்பட்டார். சினிமா, விளம்பர படங்களில் கூட சச்சினை போன்று நடித்துள்ளார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதனால், உணவு சப்ளை நிறுவனத்தில் இருந்து விலக்கப்பட்டார். இம்மாத தொடக்கத்தில் தனது சொந்த மாநிலமான பஞ்சாபிற்கு திரும்பினார். இதுகுறித்து பால்வீர் சந்த் கூறுகையில், ‘நான் பணியாற்றிய நிறுவனம் ஊரடங்குக்கு பின் மூடப்பட்டது. தொடர்ந்து வர்த்தகம் நடக்காததால் பல பணியாளர்களுக்கு அவர்களால் வேலை கொடுக்க முடியவில்லை. அதனால் நான் உட்பட பல பணியாளர்களை நிறுவனத்தில் இருந்து விடுவித்துவிட்டனர். நானும் வெளியேறிவிட்டேன். கொரோனா பிரச்னை முடிந்ததும் என்னை மீண்டும் வேலைக்கு அமர்த்துவார்கள் என்று நம்புகிறேன். எனது குடும்பத்தினருடன் சஹ்லோன் கிராமத்துக்கு வந்துவிட்டேன். கடந்த வார தொடக்கத்தில், எனக்கு கொரோனா ெதாற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன்’ என்றார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *