அரபு நாட்டை அசந்து போக வைத்த நடிகை!

தமிழில் 2016-ஆம் ஆண்டு ரிலீஸான ரகுமானின் ‘துருவங்கள் 16’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதனைத் தொடர்ந்து கெளதம் கார்த்திக்குடன் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இருந்தபோதிலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகே யாஷிகா மேலும் பிரபலமானார்.

தற்போது, அவர் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது. சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் விழி வைத்துக் காத்துக்கிடக்கின்றனர். அந்தவகையில் தற்போது ப்ரைடல் லுக்கில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *