சுகவீனம் காரணமாக வரமுடியவில்லை கருணா அறிவிப்பு!

தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று தன்னால் சமூகமளிக்க முடியாத நிலையில், சுகவீனமுற்றுள்ளதாக கருணா அம்மான், குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு (CID) அறிவித்துள்ளார்.

‘கருணா அம்மான்’ என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் அண்மையில் அரசியல் கூட்டமொன்றில் விடுத்த அறிக்கை தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பிலேயே அவர், தனது சட்டத்தரணி மூலமாக CIDயிற்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், தாம் குணமடைந்தவுடன் CID யிற்கு வந்து வாக்குமூலம் வழங்குதவாகவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கூட்டமொன்றில் உரையாற்றிய முன்னாள் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன், கொரோனாவை விட கொடூரமானவன் என, காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்த கருத்து தொடர்பில் நாவிதன்வெளியில் இடம்பெற்ற கூட்டத்தின்போது உரையாற்றிய கருணா அம்மான், கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்த கருத்து உண்மேயே என்றும், ஆனையிறவில் ஒரே இரவில் 2,000 – 3,000 இராணுவத்தினரை கொலை செய்ததாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் எழுந்த சர்ச்சையை அடுத்து, இது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு CIDயிற்கு பணிப்புரை விடுத்த, பதில் பொலிஸ் மாஅதிபர், கருணா அம்மானிடம் வாக்குமூலம் பெறுமாறும் தெரிவித்துள்ளதாக, நேற்றையதினம் (22) பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *