முடிந்தால் 30 ஆசனங்களை எடுத்துக் காட்டுகள் சஜித்திற்கு ராஜபக்ச சவால்!

2020  ஆகஸ்ட் 5 ஆம் திகதி  நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் குறைந்தபட்சம் 30 ஆசனங்களையாவது கைப்பற்றிக்காட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு சவால் விடுத்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயதாச ராஜபக்ச.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறும் என்பது உறுதி. எனவே, ஆட்சியமைப்பதற்கு சிறுகட்சிகளின் உதவி தேவைப்படாது. தேவையேற்பட்டால் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கலாம். அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கலாம்.

ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. ஆகியவற்றை மக்கள் நிராகரித்துவிட்டனர். முடியுமானால் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 30 ஆசனங்களையாவது கைப்பற்றுமாறு நான் சவால் விடுக்கின்றேன்.” – என்றும் கூறினார்.

அதேவேளை, 21/4 தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவும் கைது செய்யப்படவேண்டும். அதற்கு சட்டத்தில் இடமுள்ளது எனவும் விஜயதாச ராஜபக்ச வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *