கருணாவிடம் நாளை விசாரணை!

கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்து தொடரிபில் சி.ஐ.டியினர் நாளை (22) அவரிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.
கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் இன்று (22) பணிப்புரை விடுத்திருந்தார். இதற்கமையவே கருணா அம்மான் நாளை சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அம்பாறையில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது, ” ஆணையிறவு சண்டையில் ஒரு இரவில் 2 ஆயிரம், 3 படையினரை” கொன்றதாக கருணா குறிப்பிட்டிருந்தார்.
அவரின் இந்த அறிவிப்பு கொழும்பு அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் கண்டனத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.
இந்நிலையிலேயே புலிகள் அமைப்பில் இருந்தபோது இழைக்கப்பட்டதாக விநாயகமூர்த்தி முரளிதரனால் கூறப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சி.ஐ.டிக்கு பதில் பொலிஸ்மா அதிபரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.