முஸ்லிம்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் அஸ்பர் வேண்டுகோள்!

இன ஐக்கியத்தை இந்த நாட்டில் ஏற்படுத்த இந்த தேர்தல் களம் எமக்கான ஓர் பெரும் வாய்ப்பாகும் இதனை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்
கடந்த காலங்களில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் எடுத்த தீர்மானம் இன்று எம் ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தையும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது

MHM அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின் சரியான ராஜதந்திர அரசியல் வழிகாட்டல் இல்லாத காரணத்தால் இன்று நாட்டின் பெரும் பான்மை சமூகம் முஸ்லீம் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் மீது நம்பிக்கை  இழந்து உள்ளது அது மட்டும் அல்லாமல்

கடந்த 2015 முஸ்லீம் கட்சிகள் இணைந்து நல்லாட்சி ஒன்றை கொண்டுவந்தார்கள் அந்த ஆட்சி வலுவர்றதாக இருந்ததால் இன்று முஸ்லிம்கள் இனவாதிகளாகவும் கடும்போக்கு வாதிகளவும் முத்திரை குத்தபட்டு பெரும்பான்மை சமூகம் சந்தேக கண் கொண்டும் பார்க்கும் நிலையில் இருக்கின்றது

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மூலம் இந்தநாட்டில் முஸ்லீம்களின் வாக்குகள் இல்லாமலும் ஜனாதிபதி வரமுடியும் என்பதை விதைத்தது மட்டும் அல்லாமல் ஆளும் கட்சிக்கு  ஒரு போதும் முஸ்லிம்கள் ஆதரவு இல்லை ஏன்பதையும் விதைத்துஉள்ளார்கள்

இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்கு விடை காணவேண்டும் என்பதுதான் இந்த தேர்தல் களத்தின் தேவையாக இருக்கிறது
முஸ்லீம் காங்கிரஸ் எனும் கட்சி உதயம் ஆகும் முன் இந்த நாட்டின் முஸ்லீம் சமூகம் தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்து தனது சமூகத்திற்கு தேவையான உரிமை அபிலாசைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்த்து ராஜாதந்திரமாக  இருந்தார்கள்
அவ்வாறான ஓர் அரசியல் பாதைதான்  காலத்தின் தேவை

தேசிய கட்சிகளின் மூலம் பாரளுமன்றம் சென்று முஸ்லீம் சமுகத்தை வழிநடாத்திய ACS ஹமீத்,சேர் ராசிக்கப்பரீட்,பதியுதீன் மஹ்மூத்,பாக்கிர் மாகர் போன்ற எம்தலைவர்கள் இன ஐக்கியத்தை முன்னிறுத்தி அரசியலை மேற்கொண்டார்கள்  பெரும்பான்மை சமூகமும் நம்பியது
அவ்வாறான இன ஐக்கியத்தையும் நம்பிக்கையையும் மீண்டும் இந்த நாட்டில் கொண்டுவர வேண்டும் என்றால் நாம் தேசிய கட்சிகளுக்கு எமது ஆதரவை கொடுத்து
முஸ்லீம் சமூகம் இந்த நாட்டை நேசிக்கும் குடிமக்கள் என்றும் ஆளும் அரசாங்கத்தின் பங்காளிகள் என்றும் நாம் எம்மை அடையாளம் செய்து எமது கடந்த கால வழுக்களை துடைத்தெறிந்து நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்
அதற்காக நாம் எல்லோரும் ஒற்றுமை பட்டு  பொது ஜன பெரமுன எனும் எமது ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுத்து அதன் மூலம் எமது சமூகஉரிமை,அபிலாசை, அபிவிரித்தி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்பதை உறுதியாக நம்புகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *