கணக்கில் சேர்க்கப்படாத 3069 கொரோனா உயிரிழப்புகள்!

சிலி நாட்டில் ஏற்கனவே கொரோனாவால் உயிரிழந்து அரசின் கணக்கில் சேர்க்கப்படாத 3 ஆயிரத்து 69 இறப்புகள் தற்போது சேர்க்கப்பட்டு தரவுகள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 4 லட்சத்து 65 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், சிலி நாட்டிலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் 2 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 4 ஆயிரத்து 75 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *