கொரோனாவால் மக்களின் பயண முறையில் மாற்றங்கள் ஏற்படும்!

கொரோனா  ஏற்படுத்தியிருக்கும் அச்சம் காரணமாக, இனி நமது பயண முறையும் பெரிய அளவில் மாறும் என்கிறது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வு நடத்திய ஆய்வின் முடிவு.

எப்போதும் பயணங்களின் காதலர்களாக இருக்கும் பொதுமக்கள், இனி பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்தைப்  பயன்படுத்தும் சதவிகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும் அடுத்த 6 மாதங்களில் இந்த மாற்றத்தை கவனிக்க முடியும் என்றும் குறிப்பிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

டெல்லியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், போக்குவரத்து விஷயத்தில் உங்கள் மனநிலை என்னவென்று கேட்கப்பட்டது. இதில் அவசியமற்ற நெடுந்தொலைவு பயணத்தைத் தவிர்க்கப் போவதாகப் பலரும் கூறியுள்ளனர். அருகில் செல்ல வேண்டிய இடங்களுக்கு சைக்கிளில் செல்வது அல்லது நடந்து செல்வதும் பலரது தேர்வாக உள்ளது. அருகே செல்ல வேண்டிய இடங்களுக்கு பேருந்து, ரயிலைவிட ஆட்டோ, வாடகை கார், ஷேர் பைக் போன்றவற்றைப் பயன்படுத்த விரும்புவதாகவும் பலர் கூறியிருக்கின்றனர்.

இந்த மனநிலை மாற்றத்தால்,  அடுத்த 6 மாதத்திற்கு மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை 37-ல் இருந்து 16 சதவீதமாக குறையும் என்கிறது இந்த ஆய்வு. தற்போது சொந்த வாகனம் இல்லாத 36 சதவீதம் பேரில், 28 சதவீதம் பேர் பாதுகாப்பு கருதி விரைவில் புதிய வாகனம் வாங்கவும் முடிவு செய்துள்ளனர்.

எனவே இனி வரும் காலங்களில் சொகுசான பயணத்தைக் காட்டிலும் சுகாதாரமான, பாதுகாப்பான பயணத்திற்கே மக்கள் முன்னுரிமை அளிப்பார்கள் என்று இதில் புரிகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *