பொலிஸ் கான்ஸ்டபிள் தற்கொலை!

புத்தளம் – மாதம்பை பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இன்று (16) அதிகாலை குறித்த பொலிஸ் நிலையத்துக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை வடக்கை சேர்ந்த நமசிவாயம் டயஸ் (26-வயது) என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

(குறிப்பு : தற்கொலைகள் எதற்கும் தீர்வாகாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற போதிலும்இ இவ்வாறான கசப்பான சம்பவங்களும் பதிவாகி வருகின்றன)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *