ஜுன் 21 ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா

மாயன் காலண்டர்படி வரும் 21-ம் தேதி உலகம் அழிந்துவிடும் என்று சதிக்கோட்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதுக் கோட்பாடானது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  

மாயன் காலண்டர்!!

மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்டதாகக் கூறப்படும் மாயன் இனத்தினர், முதல் மனித நாகரிக இனத்தினர் என்று கூறப்படுகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாயன் இனத்தவர்கள்,கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே, காலண்டரைத் தயாரித்துப் பயன்படுத்தியுள்ளனர். இந்த காலண்டர் 5,126 ஆண்டுகளைக் கொண்டதாக இருந்தது. மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாக்கிய நாட்காட்டியில், டிசம்பர் 21 தேதி, 2012ல் உலகம் அழியும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் மாயன் காலண்டர் படி உலகில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. முற்றிலும் தவறு என்று  நம்பப்பட்டது.

கிரிகோரியன் காலண்டர்

உலகம் முழுவதும் தற்போது கிரிகோரியன் காலண்டர் முறையைத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1582-ம் ஆண்டுக்கு முன் இந்த காலண்டர் பரவலாகப் பயன்பாட்டுக்கு வரும் முன் உலகில் பல்வேறு வகையான காலண்டர்கள் காலத்தைக் குறிக்க மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதில் முக்கியமானது மாயன் காலண்டர், ஜூலியன் காலண்டர்.சூரியனை பூமி சுற்றிவரும் காலத்தை அடிப்படை வைத்து கிரிகோரியன் காலண்டர் வடிவமைக்கப்பட்டது. இதைத்தான் அறிவியல் வல்லுநர்களும் அறிவியல்பூர்வமானது என ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கிரிகோரியன் காலண்டர் VS ஜூலியன் காலண்டர்

விஞ்ஞானி பாலோ டகாலோகுயின் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ஜூலியன் காலண்டரை நாம் பின்பற்றும்போது அந்த காலண்டர்படி நாம் இப்போது 2012-ம் ஆண்டில்தான் இருக்கிறோம். ஜூலியன் காலண்டரில் இருந்து கிரிகோரியன் காலண்டருக்கு மாறும் ஆண்டு ஓராண்டில் 11 நாட்களைக் குறைத்துக் கணக்கிட்டுள்ளோம்.அதாவது கடந்த 1752-ம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டர் பயன்பாட்டுக்கு வந்தது. 2020ம் ஆண்டிலிருந்து 1752ம் ஆண்டைக் கழித்தால் ஏறக்குறைய 268 ஆண்டுகளாக நாம் 11 நாட்களைக் கணக்கிடவில்லை.

அப்படியென்றால் 11 x 268 பெருக்கினால் 2,948 நாட்களைச் சேர்க்க வேண்டும். 2,948 நாட்களை 365 நாளில் வகுத்தால் (365 நாட்கள் – ஓராண்டு) 8 ஆண்டுகள் கிடைக்கிறது. அதாவது 8 ஆண்டுகளை நாம் கணக்கிடவில்லை. அதாவது தற்போது இருக்கும் 2020-ம் ஆண்டிலிருந்து 8 ஆண்டுகளைக் கழித்தால் 2012-ம் ஆண்டு. ஜூலியன் காலண்டர் படி நாம் தற்போது 2012-ம் ஆண்டில் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மாயன் காலண்டர் குறிப்பிட்டுள்ளபடி 2012, டிசம்பர் 21-ம் தேதி கடைசி நாளாகும். ஜூலியன் காலண்டர் கோட்பாட்டின்படி கணக்கில் வரும் 21-ம் தேதிதான் மாயன் காலண்டர் குறிப்பிட்ட 2012, டிசம்பர் 21-ம் தேதியாகும். இதனால் மாயன் காலண்டர் குறிப்பிட்டுள்ளபடி உலகின் கடைசி நாள் ஜூன் 21-ம் தேதியா என சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.ஏற்கெனவே இதுபோன்று கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தகவல் வெளியாகி அது பொய் என நிரூபிக்கப்பட்ட நிலையில் இப்போது அதே கோட்பாடு வலம் வரத் தொடங்கியுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *