சுஷாந்த் சிங்கின் முகாமையாளர் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டுள்ளாராம்!

பிரபல இயக்குநர் அபிஷேக் கபூர் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான ‘Kai Po Che’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். 2016ம் ஆண்டு வெளியான பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தோணியாக நடித்ததன் மூலம் பெரிய அளவில் பெயர் பெற்றார். 34 வயதாகும் சுஷாந்த் இதுவரை பி.கே, ராப்டா, வெல்கம் டு நியூயார்க் போன்ற பல படங்களில் தனது இயல்பான நடிப்பால் நடிகர்களை ஈர்த்தார்.

இந்த 2020ம் ஆண்டு இவருடைய நடிப்பில் ‘Dil Bechara’ என்ற படத்தில் நடித்து வந்தார், இந்நிலையில் மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகர் சுஷாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த இளம் வயதில் இவருடைய இந்த முடிவு பாலிவுட் மட்டும் இன்றி இந்திய சினிமா உலகத்தை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், கடந்த வாரம் ஜுன் 8 இவருடைய முன்னாள் முகாமையாளர் திஷா தற்கொலை செய்துக்கொண்டராம்.
அதை தொடர்ந்து ஒரே வாரத்தில் இவரின் இழப்பு எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இவ்விருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *