பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சஹீத் அப்ரிடிக்கு கொரோனா!

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,52,944 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,28,525 ஆக உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாகிஸ்தானிலும் பரவி வருகிறது. அந்தவகையில், 1,32,405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,551 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,472 ஆக உள்ளது. மேலும் ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான ஷாஹித் அஃப்ரிடி தனது ட்விட்டரில் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று உள்ளதாக பதிவிட்டுள்ளார்.

அதில், “வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. என் உடலில் வலி அதிகரிப்பதை உணர்ந்தேன். நான் பரிசோதிக்கப்பட்டேன், துரதிர்ஷ்வசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை தேவை“ என்றுள்ளார். அஃப்ரிடி கடந்த மே மாதத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் நலனுக்கு உதவி செய்யும் விதமாக வங்கதேச கிரிக்கடெ் வீரர் முஷாபிர் ரஹ்மானின் பேட்டை 2000 டாலருக்கு வாங்கினார். இதனை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தது.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி தனது தொண்டு நிறுவனத்தின் மூலம முஷாபிர் ரஹ்மானின் பேட்டை வாங்கி உள்ளார். இதன் மூலம் கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் அவர் தனது பங்களிப்பை கொடுத்துள்ளார் என்று ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தது. அஃப்ரிடி கடந்த 2 மாதங்களாக ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் மற்றும் இதர அத்திவாசியப் பொருட்களை வழங்கி வந்தார். பாகிஸ்தானில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மூன்றாவது வீரர் அஃப்ரிடி. இதற்கு முன் தவ்ஷ்பீக் உமர் மற்றும் ஜாபர் சர்பராஸ் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடதக்கது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *