தமிழ் மக்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்!

தமிழ் மக்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் செயல்பாடுகள் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்துரைத்துள்ள அவர்,

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நாட்டின் கட்டாய தேவையாக இருந்தது, அதுவரை நாட்டில் நிலவிய மிக மோசமான செயற்பாடுகள், அதிகார அடக்குமுறைகள் என்பவற்றை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காக நான் தலைமையேற்க தீர்மானித்தேன்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த பின்னர் நாட்டில் ஜனநாயகத்தை முழுமையாக செயற்படுத்த என்னாலான சகல நடவடிக்கைகளையும் நான் முன்னெடுத்துள்ளேன் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அதுமட்டும் அல்லாது நிறைவேற்று அதிகாரத்தை அதிகமாகவே கையாண்ட தலைவரும் நானேயாவேன்.
இந்த நாட்டில் எந்தவொரு அரச தலைவரும் முன்னெடுக்காத தைரியமான வேலைத்திட்டங்களை நான் எனது ஆட்சிக்காலத்தில் முன்னெடுத்தேன். நான் செயற்பட்டதை போல வேறு எந்த தலைவரும் செயற்பட்டிருக்க மாட்டார்கள்.

இலங்கையின் எந்த ஜனாதிபதி தனது அரசாங்கத்தில் இருந்த பிரதமரை நீக்கிவிட்டு தேர்தலில் போட்டியிட்டு தோற்ற ஒருவரை மீண்டும் பிரதமராக்கியுள்ளார் ? அப்போது பிரதமாராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்கினேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *