கொரோனாவால் ஆகஸ்டில் 2.74 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள்!

இந்தியாவில் ஆகஸ்ட் மத்தியில் கொரோனாவின் 2-வது அலை தொடங்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த 12 நாளில் மட்டும் 1 லட்சம் பேர் கொரோனாவுக்கு வீழ்ந்துள்ள நிலையில், ஆகஸ்ட் மத்தியில் இந்தியாவில் 2.74 கோடி பேர் தொற்றால் பாதிக்கப்படுவர் என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ், உலகை தனது கோரப்பிடியில் இறுக்கி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,08,993 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,45,779 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,54,330 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 8,884 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ரஷியாவைத் தொடர்ந்து உலக அளவில் இந்தியா கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 4ம் இடத்தில் உள்ளது.

கொரோனாவின் வீரியம் குறைந்திராதா என அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில், இந்தியாவில் ஆகஸ்ட் மத்தியில் கொரோனாவின் 2-வது அலை தொடங்கும் என்றும் அது பேராபத்து நிறைந்ததாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா இந்தியாவில் காலூன்றி முதல் 100 நாளில் 1 லட்சம் பாதிப்பையும், அடுத்த 14 நாளில் 2 லட்சம் பாதிப்பையும், அடுத்த 12 நாட்களில் 3 லட்சம் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 12 நாளில் நாடு முழுவதும் 1 லட்சம் பேருக்கு தொற்று

கடந்த 12 நாளில் நாடு முழுவதும் 1 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பதை அடிப்படையாக கொண்டு வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் தான் ஆகஸ்ட் மாத மத்தியில் 2ம் அலை தொடங்கும் என்பது தெரியவந்துள்ளது. இதனை வெளிநாட்டு ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர். ஆகஸ்ட் மத்தியில் இந்தியாவில் 2.74 கோடி பேர் தொற்றால் பாதிக்கப்படுவர் என்று நிதி ஆயோக் மதிப்பீடு செய்துள்ளது.ஊரடங்கு தளர்வு நடைமுறைக்கு வந்த பிறகு தான், தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருவதையும் நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அதே சமயம் பொருளாதார இழப்பு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் எனவும் ஆய்வாளர்கள் கணித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இரட்டிப்பாகும் காலம் 17.4 நாளாக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் கால இடைவெளி வெகுவாக குறைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் 25ல் தேசிய ஊரடங்கு அமல்படுத்திய போது, பாதிப்பு இரட்டிப்பாகும் கால இடைவெளி 3.4 நாட்களாக இருந்தது. தற்போது இது 17.4 நாட்களாக அதிகரித்துள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *