அதிகாலையில் எழுந்தாள் மார்பகப் புற்றுநோயை தவிர்க்கலாம்!

பின் தூங்கி, முன் எழுபவள் பெண்’ என்ற முதுமொழி உண்டு. இந்த முதுமொழி நவீன காலப் பெண்களுக்கு அர்த்தமற்றதாகவும், எரிச்சல்  ஊட்டுவதாகவும் இருக்கலாம். ஆனால், இங்கிலாந்தில் இந்த முதுமொழியை அடிப்படையாகக் கொண்டு, நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள்  ஆச்சரியகரமான முடிவைத் தந்திருக்கின்றன.

தூங்கும் பழக்கம், மார்பகப் புற்றுநோய் இவ்விரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு இந்த ஆராய்ச்சியின் மையப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டது.  இதற்காக Mendelian randomisation வழிமுறையை ஆய்வு குழுவினர் கையாண்டனர். அதன்படி, இரவினில் நீண்ட நேரம் தூங்காமல் விழித்திருக்கும்  வழக்கம் கொண்டுள்ள மகளிர்(Night Owls), அன்றாடம் விடியற்காலையில் எழுந்திருக்கும் பழக்கம் உடைய பெண்கள்(Early birds) ஆகியோர்  ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதன் முடிவில் வைகறை நேரத்தில் விழித்தெழும் பழக்கம் கொண்டுள்ள பெண்களுக்கு, 40 சதவீதத்திலிருந்து 48 சதவீதம் வரை மார்பகப் புற்றுநோய்  அபாயம் இல்லாதது தெரிய வந்தது. அதேவேளையில் உறக்கத்திற்கெனப் பரிந்துரைக்கப்பட்ட 7 முதல் 8 மணி நேரத்தைவிட, அதிக நேரம் தூங்கும்  பெண்களும் மார்பகப் புற்றுநோய் அபாயத்துக்கு ஆளாகிறார்கள்.  பரிந்துரைக்கப்பட்ட நேரத்தை விட, அதிகமாகத் தூங்கும் ஒவ்வொரு மணி  நேரத்துக்கும் 20% கூடுதலாக மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர்.

இந்த ஆய்வு குழுவினர் இம்முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘‘ஆய்வில் இருந்து பெறப்பட்ட மார்பகத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள்,  விடியற்காலையில் எழுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக உள்ளது. இதற்கு முன் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இருந்து பெறப்பட்ட முடிவுகளுடன்  ஒப்பிடுகையில், எங்களுடைய ஆய்வு முடிவுகளில், ‘நைட் ஷிஃப்ட்டில் பணியாற்றும் மற்றும் இரவு நேரங்களில், விளக்கு ஒளியின் கீழ் நீண்ட நேரம்  செலவிடும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டது’ என தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய  4 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற இந்த ஆய்வில், ஸ்காட்லாந்தில் நடைபெற்ற National Cancer Research Institute பன்னாட்டு  கருத்தரங்கில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *