பிரபல திரைப்பட நடிகர் போதைப் பொருளுடன் கைது!

இரண்டு பக்கெட் ஐஸ் போதைப்பொருள், அதனை பயன்படுத்த உபயோகிக்கப்படும் உபகரணம் மற்றும் 5 கிராம் கேரளா கஞ்சா ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பேரை நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிமடை நீதவான் நதீரா போகாதெனிய உத்தரவிட்டுள்ளார்.

வெலிமடை – நாவேல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான நபரும், கொழும்பு மருதானை சேர்ந்த 44 வயதான பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிமடை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நாவேல பிரதேசத்தை சேர்ந்த நபரின் வீட்டை சோதனையிட்ட போதே இந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நபர் கொழும்பில் உள்ள அரச நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்து வருவதுடன் வாடகைக்கு அமர்த்திய கார் ஒன்றில் இந்த போதைப் பொருளை கொண்டு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட அரச நிறுவனத்தின் ஊடகப் பிரிவின் பெயர் எழுதப்பட்ட பலகையை காரில் காட்சிப்படுத்த இந்த நபர் போதைப் பொருளை எடுத்து வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *