பிரான்சில் எட்டு இலட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

வரும் மாதங்களில் பிரான்சில் 800,000 பேர்வரை வேலை இழப்பை சந்திப்பார்கள் என பிரான்ஸ் அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்த வேலை இழப்பு பிரச்சனை உருவாகவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா உள்ளிருப்பு காலத்தில் சகல பொருளாதாரக் கட்டமைப்புக்களும் முடக்கப்பட்டு, கணிசமான அளவு தொழிலாளர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும்படி பணிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது உள்ளிருப்புக் காலம் முடிவடைந்துள்ள போதும், நிலைமை முன்னரைப் போல இயல்பாக இல்லை.

இதனால் இந்த வேலை இழப்பு உருவாக உள்ளதாக தாம் கணித்திருப்பதாக பொருளாதார அமைச்சர் ( le ministre de l’Economie ) Bruno Le Maire தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பிரான்சில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவை இடம்பெற வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் எதிர்வு கூறியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *