பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதி எப்படி இருக்க வேண்டும்?

மக்கள் பிரதிநிதி ஒருவர் எப்படி இருக்க வேண்டும் / தெரிவு செய்யும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள்.

01. கற்றவர்கள் (இது அனைத்து விடயங்களுக்கும் அவசியமானவை)

02. குடும்ப பின்னணி (இது ஒருவரின் பழக்கவழக்கம், பண்பாடு, ஒழுக்கம் போன்றவற்றை மதிப்பீடு செய்வதற்கு)

03. பிரதேச வாதம், மொழி, இன, நிற, ஊர் பாகுபாடு அற்றவராக இருத்தல்.

04. சிறந்த ஆளுமையுள்ள, தலைமைத்துவம், முரண்பாடுகள், பிரிவு நிலைகளின் போது நேர்த்தியான முறையினை கையாண்டு ஒற்றுமை படுத்துபவராகவும் செயற்த்திட்டம் உருவாக்கி நடைமுறைப்படுத்தக் கூடியவர்.

05. அயலவர்களுடனான சிறந்த தொடர்பாடல்.

06. பதவி, பட்டம், செல்வம், வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் குடும்ப உறவுகள், இரத்த உறவுகளை மதிக்க தெரிந்தவர்.

07. பொது மக்களுடனான சமூக தொடர்புகள் மற்றும் பழக்க வழக்கங்கள்.

08. அரசியல் முன்னர் உள்ள சமூக சேவைகள், பொதுப்பணிகளில் உள்ள ஈடுபாடுகள்.

09. பொது மக்கள் தொலைபேசி அழைப்பு சமூக வலையத்தளம் (WhatsApp, Facebook Messanger) குறுஞ்செய்திகள் பதில் வழங்குதல்.

10. பொது மக்களின் மங்கலம், அவமங்கலம் நிகழ்வுகளில் வர்க்க வேறுபாடுகள் அற்று கலந்து கொள்ளுதல்,  உதவி செய்தல்.

11. தேவைகள் நிமிர்த்தமாக பொது மக்கள் வீடு நோக்கி வருகின்ற போது அதற்கு நேரம் எடுத்து உரிய தீர்வினை விரைவாக பெற்றுக் கொடுத்தல்.

12. மக்கள் பணிகள், அபிவிருத்தியில் முழு கவனத்தை செலுத்துதல்.

13. அசாதாரண சூழ்நிலைகளின் போது கைகொடுத்தல் மற்றும் மனிதாபிமான, நிவாரண பணிகளை மேற் கொள்ளுதல்.

14. கட்சி வேறுபாடுகள் அப்பால் மனிதன் என்ற ரீதியில் மரணவீடு, விபத்து, சுகயீனம் போன்றவற்றுக்கு செல்லுதல், நலன் விசாரித்தல்.

15. தேர்தல் காலங்களில் மக்களை வாக்குக்கு மட்டும் பயன்படுத்தி விட்டு வெற்றி பெற்ற பிறகு எந்த தொடர்பு அற்று காணப்படுதல் ௯டாது.

16. 05 வருடத்துக்கு ஒரு தடவை இல்லம் சென்று வாக்கு வங்கி செல்லுவதை தவிர்த்து எல்லா காலங்களிலும் மக்கள் தொடர்பை கடைப்பிடித்தல்.

17. தேர்தல் காலங்களில் ஆதாரவாளர்கள், நலன்விரும்பிகள், சமூக அமைப்புகள், இணைப்பாளர்கள் தனது வெற்றிக்கு உழைத்தவர்களை மறந்து நடத்தல் ௯டாது.

18. தொழில்வாய்ப்பு, இதர உதவிகள், அபிவிருத்திகளில் பாரபட்சம், பிரதேச, இன வேறுபாடுகள் காட்டுதல்.

19. ஆதாரவாளர்கள் கலந்தாலோசித்து அடிப்படையில் தீர்மானங்களை மேற் கொள்ளல்.

20.மக்கள் பணத்தில் மக்களுக்கு சேவைகள் செய்யாமல் சொந்த தேவையை செய்பவராக இருக்கக் கூடாது

21. மோசடிக்காரர்களாக மக்களை ஏமாற்றுபவர்களாக இருக்கக் கூடாது

22.தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்குபவராக இருக்கக் கூடாது.

23.மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர் மக்கள் வரிப்பணத்தில் பெறப்படும் நிதி ஒதுக்கீட்டை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் மாறாக சொந்த தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவராக இருக்கக் கூடாது ஏனெனில் அது மக்களின் பணம் .

இது பாராளுமன்ற, மாகாண சபை, உள்ளுராட்சி மன்ற (மாநகர, நகர, பிரதேச) பிரதிநிதிகள் பொருத்தமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *