கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொள்ளையடித்தவரை வளைத்துப் பிடித்த பெண் பொலிஸ்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 79 லட்சம் கொள்ளை; வளைத்துப் பிடித்த பெண் பொலிஸ்!

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் நுழைந்து 79 இலட்சம்  பணத்தை கொள்ளையிட்டு தப்பிச்சென்ற வைத்தியரொருவர் பொலிஸாரால் நேற்று  கைது செய்யப்பட்டார்.

ஊதியப் பிரிவின் அதிகாரியொருவருக்கு போலித் துப்பாக்கியைக் காண்பித்து, 79 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டதாக, தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் லயனல் முஹந்திரம் குறிப்பிட்டார்.
குறித்த பணத்தை  வைத்தியசாலை ஊழியர்களின் சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்காக இந்த நிதி கொண்டுவரப்பட்டிருந்தது.
பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *